பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வழங்கி வருகிறது. இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் யுஏஇ செல்லலாம். அந்த நாட்டிலேயே தங்கலாம். மேலும் இந்த விசாவின் மூலம் யுஏஇ-யில் தங்கி கல்விகற்கலாம், தடையின்றி வணிகமும் செய்யலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிகு விசாவை தற்போது சென்னை-28 திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இசையமைப்பாளர் கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபுவுக்கு யுஏஇ வழங்கியுள்ளது. ஏற்கெனவே தமிழக திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் பார்த்திபன், நாசர், சோனூ சூட், விஜய் சேதுபதி, நடிகைகள் ஆண்டிரியா, மீரா ஜாஸ்மீன், மீனா, திர்ஷா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.