நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் மகனும் கேரளா வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதில், சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து நேற்று, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி மட்டும் ஆஜரானார். அப்போது, அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் கண்ட பேரணி நடத்த முடிவு செய்து, அதன்பட, டெல்லியில் உள்ள சாலைகளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், மாநில தலைவர்கள், நிவாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் 144 தடை உத்தரவை மீறி பேரணியாக சென்றனர். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரமும் பேரணியில் பங்கேற்று சென்று கொண்டிருந்தபோது, பேரணியை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த டெல்லி காவலர்கள் மூன்று பேர் தாக்கியதில் ப.சிதம்பரத்திற்கு இடது கை விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதனையடுத்து, ப.சிதமரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாளை முதல் என் வழக்கமான பணிகளை மேற்கொள்வேன். 10 நாட்களில் குணமடைந்து விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ப.சிதம்பரத்துக்கு அதரவாகவும், டெல்லி காவல்துறையினரை கண்டித்தும் அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர்.