கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் கிராமத்தினை சார்ந்தவர் விஸ்வநாதன், முன்னாள் கூட்டுறவு செயலாளரான இவர், மினி கிட்டாச்சி மூலம், கரும்பு கிடங்குகளை வெட்டி விதைக்கரணைகளை நடவு செய்து மற்ற விவசாயிகளிடம் ஒரு முன்மாதிரி விவசாயியாக திகழ்கின்றார். ஒரு ஏக்கருக்கு கரும்பு கிடங்கு வெட்ட, ஒரு வாரம் ஆகும் நிலையில், மினி கிட்டாச்சி மூலம் 16 மணி நேரத்தில் கரும்பு கிடங்கு வெட்டுகின்றார். குறித்த நேரத்தில் பணி முடிவடையும் என்ற திருப்தி ஒரு புறம், விவசாயப்பணியில் மற்ற கூலி ஆட்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை இனி வராது என்றும், கிடங்கு வெட்டும் செலவும் குறைகின்றது. இதுமட்டுமில்லாமல், ஒரே மாதிரியான ஆழம் மற்றும் அளவுடன் கிடங்குகள் வெட்டப்படுகின்றது. கிட்டாச்சியின் எடை 1 டன் மட்டுமே என்பதினால் மண் இறுகுதல் என்பதும் கரும்பு தோட்டத்தில் தவிர்க்கப்படும். 1 ஏக்கருக்கு 16 மணி நேரம் என்கின்ற விதத்தில் கரும்பு கிடங்கு வெட்டப்படும் நிலையில், உள் நஞ்சையில் கரும்பு தோட்டத்திற்கு, கரும்பு கிடங்கு வெட்டவும், கரும்பு கட்டி, தட்ட ரூ.20 ஆயிரம் செலவு ஆன நிலையில், இந்த மினி கிட்டாச்சியில் வெறும் ரூ.14 ஆயிரம் மட்டுமே செலவு என்கின்றனர் விவசாயிகள். மேலும், இவரது தோட்டத்திலேயே அந்த பகுதியின் சுற்றுவட்டாரங்களில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கும் சோதனை முறையில் வாய்க்கால் பாசனத்தில் உள்ள உள் நஞ்சையில் கரும்பு கிடங்கு வெட்டுவது பற்றி மற்ற விவசாயிகளுக்கும் செயல்விளக்கமும் செய்து காட்டப்பட்டது.