இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. முன்னதாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி முதலாவது ஒருநாள் போட்டியைச் சந்திக்க உள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.