இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இலங்கையில் உள்ள காலே சர்வதேச மைதானத்தில் இலங்கை-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்த நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி, 3ஆம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன்களுடன் முன்னிலை பெற்றிருந்தது. 4ஆம் நாளான நேற்று தினேஷ் சண்டிமல் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதையடுத்து இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டில் முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தியது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேய அணியை இலங்கை அணி வென்றது. இதன்மூலம் 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிந்தது.