இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 615 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 678ஆக இருந்த நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில்,1 லட்சத்து 31 ஆயிரத்து 043 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் 20 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 13 ஆயிரத்து 265 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 கோடியே 29 லட்சத்து 96 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,99,00,59,536 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10 லட்சத்து 64 ஆயிரத்து 038 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.