இந்தியாவிலிருந்து 1952ஆம் ஆண்டு அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தைகளை மீண்டும் இந்திய காடுகளில் வாழவைக்கும் முயற்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில், ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து ‘திட்ட சீட்டா’ மற்றும் நாட்டின் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடங்களை புத்துயிர் மற்றும் பன்முகப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு 8 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன. இவை, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடியின் பிறந்த தினமான இன்று, அவரின் கைகளாலே திறந்துவிடப்பட்டன. சிறுத்தைகளை திறந்துவிட்ட பிரதமர் மோடி, அவைகளை புகைப்படம் எடுத்தார். இந்தியாவில் திறந்த காடுகள் மற்றும் புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கு சிறுத்தைகள் உதவும். மேலும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் நீர் பாதுகாப்பு, கார்பன் சுரப்பு மற்றும் மண்ணின் ஈரப்பதம் பாதுகாப்பு போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை மேம்படுத்தவும் உதவும். மேலும், 100-120 கிமீ வேகத்தில் ஓடக்கூடிய சிறுத்தைகளுக்கு சிறிய குன்றுகள் மற்றும் காடுகள் உள்ள குனோ சிறந்த வாழ்விடமாக இருக்கும். இதையொட்டி, சிறுத்தைகளின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குனோ தேசிய பூங்காவில் செய்யப்பட்டுள்ளன.