மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் தான் எழுதிய ஓஎம்ஆர் சீட்டில் தனக்கு 720-க்கு 564 மதிப்பெண் என இருந்ததாகவும் ஆனால் நீட் தேர்வு முடிவுகளில் 114 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தன்னுடைய ஓஎம்ஆர் நேரில் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், நீட் தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருப்பதாக மாணவி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி பவானி சுப்பராயன், நீட் விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.