வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கம் அருகில் அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தேசிய தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ’தமிழகம் முழுவதும், வீடுகளில் ஜெபக்கூட்டம் நடத்துவதை தடை செய்யக்கூடாது, சொந்த பட்டா இடத்தில் சர்ச்சுகள் கட்ட முழு சுதந்திரம் வழங்க வேண்டும், திருச்சபைகளுக்கு கொடுக்கப்படும் பல்வேறு இடையூறுகளை தடுக்க வேண்டும், போதகர்கள் கிறிஸ்தவ மக்கள் ஊழியம் செய்யும்போது இடையூறு செய்யக்கூடாது, கிறிஸ்தவ மக்களுக்கு போதுமான கல்லறைகள் அமைக்க இடங்களை ஆங்காங்கே ஒதுக்கி தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.