day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்ணைப் பின்தொடர்ந்தால் சிறைத் தண்டனை

பெண்ணைப் பின்தொடர்ந்தால் சிறைத் தண்டனை

திரைப்படங்களும் சமூக ஊடகங்களும் பெண்ணின் விருப்பு குறித்துத் தவறான பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளன. அதன் விளைவு ஒரு பெண்ணைக் கேலி, கிண்டல் செய்வதும், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வதும், பின்தொடர்ந்து தொல்லை தருவதும் இயல்பு என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால், பொது இடங்களில் பாலியல் வன்முறை அதாவது பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல் என்பது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்தப் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வருகின்றன.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் உள்ள முக்கியமான விதிகள்:
பொது இடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறலுக்கு என்று தனிப்பட்ட சட்டம் எதுவும் கிடையாது. இது மாதிரி நடக்கக்கூடிய பாலியல்ரீதியான தொந்தரவு வழக்குகளுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டனைகள் உண்டு.
அதாவது பாலியல்ரீதியான செயலில் ஈடுபடுவது, சைகை காட்டுவது, பாட்டுப் பாடுவது, போர்னோகிராபிக் படங்களைப் பெண்களிடம் காட்டுவது, பாலியல் ரீதியான கேலி, கிண்டல் செய்வது போன்றவற்றுக்கு எல்லாம் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டனை உண்டு.
ஒருவர் ஒரு பெண்ணின் பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு வார்த்தையாலோ, ஒலி எழுப்பியோ, சைகையின் மூலமோ அல்லது ஏதேனும் பொருளை வெளிப்படுத்தினாலோ அல்லது அப்பெண்ணின் தனிமையில் குறுக்கிட்டோலோ பிரிவு 509இன் கீழ் குற்றம் புரிந்தவராவார்.
இந்திய தண்டனைச் சட்டம் 354 பி பிரிவான, ஆடைகளை அகற்ற வைக்கும் எண்ணத்துடன் பெண்களைத் தாக்கிய குற்றம் நிரூபணம் ஆனால், 7 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை இனி 10 ஆண்டுகள வரை வழங்கப்படும்.
பெண்களை அச்சுறுத்துதல் மற்றும் வெறுப்பேற்றும் வகையில் பின்தொடர்தல், பெண் மறுத்தும் அவருடன் தனிமையில் உரையாடுதல் போன்றவற்றுக்கு 354டி பிரிவின்கீழ் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மைனர் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் என்கிற 372ஆம் பிரிவு பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தவோ, மைனர் பெண்களை விலைக்கு அல்லது வாடகைக்கு வாங்குதல் என்கிற 373-ஆம் பிரிவுக்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.
இந்திய தண்ட னைச்சட்டம் பிரிவு 294 (IPC Section 294 )
பிறருக்குத் தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் எந்த ஆபாசச் செயலைப் புரிந்தாலும், அல்லது ஆபாசமான ஒரு பாடலைப் பாடினாலும், வாசகத்தை உச்சரித்தாலும் சொன்னாலும் குற்றமே. இந்தக் குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 (IPC Section 354)
ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்க வேண்டும் என்கிற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவதும், தாக்க முனைவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
பின்தொடர்தல் (Stalking) – IPC Section 354D
ஒரு பெண்ணின் விருப்பமின்றிப் பின்தொடர்வதோ, தொடர்புகொள்ள முயற்சிப்பதோ,நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்ச்சியாகத் தொல்லைகள் கொடுப்பதோ, செல்லும் இடமெல்லாம் நின்று பிரச்சினை செய்தாலோ, வெவ்வேறு வழிகளில் உளவுபார்த்தாலோ, அச்சுறுத்தல் ஏற்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, எதற்கேனும் கட்டாயப்படுத்தினாலோ,சமூக வலைத்தளங்கள் மூலம் கண்காணித்தாலோ அல்லது பேசச் சொல்லி கட்டாயப்படுத்தினாலோ, போலிக் கணக்குகள் மூலம் தொந்தரவு செய்தாலோ அல்லது துன்புறுத்தினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ சட்டப்படி குற்றமாகும்.
முதல் முறை இக்குற்றத்தைச் செய்யும் போது, 3 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாகவும் அதைத் தொடர்ந்தும் இக்குற்றம் செய்யும்பட்சத்தில், பெயிலில் வர முடியாத, 5 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். ஒரு பெண்ணைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தப் பின்தொடருவதும் ஸ்டாக்கிங்தான்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!