day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

“சாதிக்க மாற்றுத் திறன் தடையல்ல” விளையாட்டு களத்தை அதிர வைத்த அவனி லெகாரா !

“சாதிக்க மாற்றுத் திறன் தடையல்ல” விளையாட்டு களத்தை அதிர வைத்த அவனி லெகாரா !

2012 ஆண்டு மிக மோசமான கார் விபத்தில் சிக்கியவர் தான் தற்போது பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ள அவனி லெகாரா. அந்த விபத்தில் அவருக்கு ஸ்பைனல் கார்டு கடுமையாக பாதிக்கப்பட்ட பிறகும்,விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தை அவர் குறைத்துக் கொள்ளவில்லை.அவருடைய அந்த தாகத்திற்கு ஏற்றார் போல், அவருடைய தந்தையும் மனம் தளராமல் ஊக்குவித்து வந்துள்ளார்.அதன் விளைவாக துப்பாக்கிச் சுடும் போட்டியில் அவனி லெகாரா பதக்கங்களை குவிக்கத் தொடங்கியுள்ளார்.2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார் அவனி லெகாரா. அதே போன்று 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.அவருடைய தன்னம்பிக்கையும்,விடா முயற்சியும் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி வரை கொண்டு சேர்த்துள்ளது.

இதனைதொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற இருந்த 16 – வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக கைவிடப்பட்ட நிலையில்,இந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரங்கானை அவனி லெகாரா இரண்டு பதக்கங்களை கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.10 மீட்டர் ரைபில் பிரிவில் 249.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இதுவரை யாரும் 249 புள்ளிகளை கடக்காத நிலையில், அவருடைய இந்த வெற்றி விளையாட்டுகளத்தை அதிரவைத்துள்ளது.இதன் மூலம் தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்ததை பிடித்துள்ள அவர்,நேற்று நடந்த மற்றொருப் போட்டியில் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்.இதன் மூலம் 50 மீட்டர் ரைபில் பிரிவில் 445 புள்ளிகள் பெற்று வெண்கலம் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.அவருடைய இந்த வெற்றிக் குறித்து பேசியவர்,”சற்றும் இதனை எதிர்பார்க்கவில்லை.மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.நான் பெற்றுள்ள இந்த பதக்கங்களை நாட்டிற்கு அர்பணிக்கிறேன்.சாதிப்பதற்கு மாற்றுத்திறன் தடையல்ல என்பதை என்னைப் போன்றவர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே கடுமையாக உழைத்தேன்.நான் பெற்றுள்ள இந்த பதக்கங்கள் அவர்களுக்கு இது ஒரு முன் உதாரணம். அதனால் வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளைக் கண்டு தேங்கி விடக் கூடாது.அந்த தடைகளை படிக்கற்களாக மாற்ற முயல வேண்டும்”என்று கூறியுள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!