இந்தியா முழுவதும் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,554 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,44,90,283 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 48,850ஆக உள்ளது. மேலும், 18 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,28,139 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து 6,322 போ் குணமடைந்த நிலையில் இதுவரை 4,39,13,294 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.