இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 09 ஆயிரத்து 568 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகிறனர். இத்துடன், நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 684 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4 கோடியே 28 லட்சத்து 51 ஆயிரத்து 590 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், 29 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியானதால், 5 லட்சத்து 25 ஆயிரத்து 168 பேராக உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.