தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கை, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, மாமல்லப்புரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.