இலங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.