இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்று இருப்பது தற்போது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இனி சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக மற்ற இந்திய தேச தலைவர்களின் புகைப்படங்களும் இடம் பெற செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல, மற்ற தேசத்தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படமும் இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரூபாய் நோட்டுகளில் மறைவாக அச்சிடப்பட்டு இருக்கும் மகாத்மா காந்தியின் புகைப்படமும் கூடுதலாக இடம்பெறும். தற்போது அந்த இடங்களில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் புகைப்படங்களையும் வெளியிட ரிசர்வ் வங்கி ஏற்பாடுகள் செய்து வருகிறது. ரிசர்வ் வங்கி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய நாணயவியல் வெளியீட்டு அமைப்புகள் இணைந்து ரூபாய் நோட்டுகளில் இந்த மாற்றங்களை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் இந்த மாற்றங்களுடன் கூடிய இந்திய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.