பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள தசரா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கீழ்இருந்து மேலே செல்லும் ராட்சத ராட்டினம் 50 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராட்டினத்தில் இருந்த குழந்தைகள் உட்பட 50 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கண்காட்சியில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் கடைபிடிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ராட்சத ராட்டின விபத்துத்தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்து வருகிறது.