விடுதலைப்போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். அதில், “மாமனிதர் வ.உ.சிதம்பரம் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கு அவரின் மகத்தான பங்களிப்புக்கு நாடு கடன்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் தற்சார்பாக மாறுவதற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். அவரது சிந்தனைகள் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். செக்கிழுத்த செம்மலின் பிறந்தநாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை, இராஜாஜி சாலையில் உள்ள அவரது திருவுருச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சென்னை கலைவாணர் அரங்கில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் இன்று நவீன முறையில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் திரைப்படப்பட்டுள்ளது.