தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ஜூன் 27ஆம் தேதி கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து அனைத்துத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் விவாதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆன்லைன் ரம்மி தடைக்கு அவசர சட்டம், மாநில புதிய கல்விக் கொள்கை, மேகதாது அணை விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.