முகமது நபி குறித்து தொலைக்காட்சியில் பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்து காரணமாக அவர் மீது பல மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நுபுர் ஷர்மா வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், நுபுர் ஷர்மாவை கடுமையாக சாடியுள்ளது. அதன்படி, ”நுபுர் ஷர்மா வார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லாததால், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும் பேசிவிட முடியாது. நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா? அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நுபுர் சர்மா நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெய்லர் கொல்லப்பட்டது நுபுர் சர்மாவின் பேச்சே காரணம். தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றதுடன் நுபுர் ஷர்மா மீதான வழக்குகளுக்கு காவல்துறையினர் நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம் இதுகுறித்து காவல்துறை சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.