இந்தியாவில் 13 முதல் 19 வயதோருக்கான, ஜூனியர் முதல் பேட்மிண்டன் என்ற BIG BASH தொடர் இன்று தொடங்கி நாளை மறுநாள் வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 88 பேட்மிண்டன் வீரர்கள் அணிக்கு தலா 11 பேர் என்ற வீதம் 8 அணிகள் லீக் முறையில் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இவர்கள், ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு U15 மகளிர் ஒற்றையர், U17 ஆடவர் ஒற்றையர், U17 கலப்பு இரட்டையர், U19 கலப்பு இரட்டையர், U19 ஆடவர் இரட்டையர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெற்று முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகையும், அரையிறுதிப் போட்டிகளில் வெளியேறுபவர்களுக்கு ரூ.2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.