இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக, அதிகாரப்பூர்வ பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி வீரர்கள் புதிய சீருடையுடன் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், மொஹலியில் நாளை நடக்கவுள்ள முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி இந்த புது சீருடையில் களம் இறங்கவுள்ளது. ஆசியக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாத இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராகத் தலா மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்பிறகு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கிறது.