கரூர் மாவட்டம், குளித்தலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் 8 ஆண்டுகள் ஆட்சி நிறைவுப்பெற்று 9ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சாதனை குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, ”தாத்தா கலைஞர் கருணாநிதியின் ஆட்சி கூட நல்ல ஆட்சி இல்லை. தனது தந்தை மு.க.ஸ்டாலின் ஆட்சி தான், நம்பர் ஒன் என்று கூறும் திருல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழக மக்களை குழப்பி வருகிறார். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் மறைந்த முதல்வருமான கருணாநிதியின் பேரன் உதயநிதியே என் தந்தை மு.க.ஸ்டாலின் ஆட்சி தான் நம்பர் ஒன் ஆட்சி என்று கூறுவது கலைஞர் ஆட்சி அப்போது நல்ல ஆட்சி இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறார். கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்னர் மின்சாரத்தினை கண்டுபிடித்த அறிவியலாளர்கள் வாழ்ந்த பூமியில் மின்சாரம் ஏன் கட் ஆச்சு என்றால் அணிலால் தான் என்று விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் அமைச்சர் உள்ள மாவட்டம் தான் இந்த குளித்தலை பகுதியினை சார்ந்த கரூர் மாவட்டம் என்று அவர் பேசினார்.