இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தச் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 7 அன்று முடிவடைகிறது. இதனைத்தொடர்ந்து, ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஹராரே நகரில் ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி விளையாடவுள்ளது. 2016க்குப் பிறகு இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian team in Zimbabwe ODI cricket