பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கச்சா எண்ணெய் விற்பனை குறித்தான கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழைய கச்சா எண்ணெய் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இனி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற கட்டாயம் விலக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்-க்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் என கூறப்படுகிறது.