நாடு முழுவதும், நாளை மறுநாள் (ஜூலை 1ஆம் தேதி) முதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனைக்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பலூன்களை கட்ட பயன்படுத்தும் குச்சிகள், காது குடையும் பட், ஐஸ் கிரீம் குச்சிகள், கேன்டி குச்சிகள், கோப்பைகள் போன்ற 100 மைக்ரானுக்கு குறைவான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.