பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுத்தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் சிவில் அணுசக்தியில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். உலகளாவிய உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான புவிசார் அரசியலில் காணப்படும் சவால்கள் குறித்தும் விவாதித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.