சென்னை ராயப்பேட்டையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி அஇஅதிமுக கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.