உலக அளவில் பெரும் நிலப்பரப்பை வைத்திருக்கும் ரஷ்ய நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை பெருக்கம் சரிவை நோக்கி சென்றுள்ளது. இதை சரிசெய்யும் பொருட்டு ரஷ்ய அதிபர் புதின் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி, மக்கள்தொகையை சரிவில் இருந்து மீட்டு ரஷ்ய நாட்டின் மக்கள்தொகையை பெருக்க, 10 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு 13,500 பவுண்ட் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மதிப்பு இந்திய ரூபாயில் 13 லட்சம் ஆகும். இதில், தாய்க்கு 10ஆவதாக பிறக்கும் குழந்தைக்கு 1 வயது நிறைவடைந்த உடன் கொடுக்கப்படவுள்ள இந்தத் தொகையை பெற பத்து குழந்தைகளும் உரிருடன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், போரில் அல்லது அவசரநிலையில் குழந்தைகளில் யாரேனும் உயிரிழந்தாலும் பரிசு கிடைக்கும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடத்தக்கது.