day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நாசா பணியில் கோவைப் பெண்

நாசா பணியில் கோவைப் பெண்

விண்வெளி ஆய்வுகளில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வந்தாலும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையமே முன்னணியில் உள்ளது. இந்த விண்வெளி மையத்தின் பல்வேறு முக்கியத் திட்டங்களில் இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், சுவாதி மோகன் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளார்கள்.
இவர்களது வரிசையில், தற்போது நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷினி அய்யர் முக்கியப் பங்காற்றி வருகிறார். நாசா விண்வெளி மையம் 2024ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஓரையன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு ஆர்ட்டெமிஸ் என்று நாசா பெயரிட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் வரும் நவம்பர் மாதம் ஓரையன் விண்கலம் ஆளில்லாமல் செலுத்தப்பட்டு, பூமிக்குத் திரும்ப உள்ளது. இதன் பிறகு ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்தில் 2023 அல்லது 2024-ஆம் ஆண்டில் ஓரையன் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் ராக்கெட்டைத் தயாரிக்கும் திட்டப் பணிகளில்தான் சுபாஷினி அய்யர் ஈடுபட்டுவருகிறார். தந்தை ஆட்டோ மொபைல் நிறுவனத்தை நடத்தினார். இதுவே சுபாஷினி அய்யருக்கு மெக்கானிக்கல் துறை மீது ஆர்வம் ஏற்படக் காரணம். சகோதர, சகோதரிகள் கணினி மற்றும் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தபோது இவர் மட்டும் மெக்கானிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்தார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 1992ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அவர் படித்த கால கட்டத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
“நிலவுக்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் சென்று 50 வருடங்கள் ஆகிறது. அதனால், இரண்டாவது முறையாக விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் நாசா ஈடுபட்டுள்ளது. நிலவைத் தாண்டி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பவும் இந்தத் திட்டம் முன்னோடியாக இருக்கும். அதற்காக ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் ஓரையன் விண்கலம் 4.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் ஆளில்லாமல் செலுத்தப்பட உள்ளது. இது 3 வாரப் பயண திட்டம். எஸ்.எல்.எஸ். என்ற உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டில் ஓரையன் நிலவுக்குச் செலுத்தப்பட உள்ளது.
நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து இந்த ராக்கெட்டைத் தயாரிக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போயிங் நிறுவனக் குழுவின் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறேன். 500 வினாடிகளில் 5.3 லட்சம் அடி பாயும் வகையில் ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று இந்தத் திட்டம் குறித்து சுபாஷினி கூறியுள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!