day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நல்லது ஆவதும் தீயது  அழிவதும் பெண்ணாலே – ராஜேஸ்வரி

நல்லது ஆவதும் தீயது  அழிவதும் பெண்ணாலே – ராஜேஸ்வரி

நல்ல குடும்பம், நல்ல நாட்டை உருவாக்கும்; நல்ல நாடு, நல்ல உலகைப் படைக்கும். அதற்கு ஆயிரம் பேர் காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த ஆயிரம் பேருக்குப் பின்னால் இருப்பவர்கள் பெண்கள்தான். ஆம், ஒரு பெண்ணால்தான் சிறந்த உலகை உருவாக்க முடியும். குறிப்பாக, இல்லத்தரசி என்றழைக்கப்படும் மனைவியர் நல்ல ஆசானாக, நல்ல துணையாக, குடும் பத்தை நடத்துவதுடன், அதைச் சிறந்த பல் கலைக்கழகமாகவும் மாற்றுகிறார்கள். ஆக, பெண்ணின் சக்தி என்பது சாதாரணமானது அல்ல; ஆற்றல்மிக்கது. 

மகளிர், அறிவுடன் கல்வியும் பெற்றிருந்தால் நாட்டில் மருத்துவமனைகளே வேண்டாம் என்கிறார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். குடும்பத்தின் அச்சாணியே பெண்கள்தான் என்கின்றனர், முண்டாசுக் கவிஞர் பாரதியும், முப்பால் வார்த்த திருவள்ளுவரும்.  ஆகையால், பெண்களாகிய நாம் சமைப்பதும், துவைப்பதும், டி.வி. சீரியல்கள் பார்ப்பதும்தான் வேலை என நினைக்காமல், நம்மால் முடிந்ததை, நல்ல செயல்களை நாட்டிற்கும், வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் செய்ய வேண்டும். குறிப்பாக, நம் பொழுதுபோக்கையே நல்ல செயல்கள் செய்யும் பொழுதாக மாற்ற வேண்டும். 

வேலை மட்டுமே முன்னேற்றமல்ல

வேலைக்குச் சென்று சம்பாதிப்பது மட்டுமே பெண் முன்னேற்றத்தின் அடையாளமல்ல. குடும்பத்திற்குப் போதிய வருமானத்தை ஆண்கள் சம்பாதித்தால் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை. பெண்கள் வீட்டில் இருந்தால்தான் ஆரோக்கியமான சமையல் கிடைக்கும். மேலும் குழந்தைகளை, பெரியவர்களை நன்கு கவனித்துக்கொள்ள முடியும். அதற்காக, பெண்கள் வீட்டில் சிறைவைக்கப்படுகிறார்கள் என்று அர்த்தமில்லை. அதேநேரத்தில், இன்று பெண்களும் வேலைக்குச் செல்வதால்தான் பல வீடுகளில் நல்ல சமையல் இல்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு சமையலைப் பொதுவாக்குவதும் நல்லது. 

இன்றைய சூழலில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடிப் பேசுவதற்கு நல்ல நேரமும் கிடைப்பதில்லை. குழந்தைகளை ஒழுங்காகக் கவனிக்கவும் முடிவதில்லை. இதனால் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன், மன ஆரோக்கியத்தையும் இழக்கின்றனர். அத்துடன், சம்பாதித்த பணத்தை யும் மருத்துவர்களிடம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகிறது. ஆகையால், இதைத் தவிர்க்க வேண்டியது பெண்களின் கடமையாகும்.

வாசிப்பு வானம்

பொதுவாக, ஒரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றால் அங்கு ஒரு வேலையில்தான் கவனம் செலுத்த முடியும். ஆனால், பெண்களாகிய நாம் வீட்டில் இருந்து நடமாடும்போது, எத்தனையோ செயல்களையும் பணிகளையும் செய்ய முடியும்; சாதிக்க முடியும். அதற்கு, முதலில் பெண்கள் வீணாகப் பொழுதைக் கழிப்பதிலிருந்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சிலர் எப்போது பார்த்தாலும் தொலைக்காட்சி முன்பே தவம் கிடப்பார்கள். இதை முதலில் தவிர்த்துவிட்டு, நல்ல புத்தகங்கள் வாசிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதை நாம் செய்வதால், நம் குழந்தைகளும் அந்தப் பழக்கத்தையே கடைப்பிடிப்பார்கள். ஆம், அதனால் அவர்களும் நல்ல புத்தகங்களை வாசிக்கப் பழகுவார்கள். பின்னர் நாமே, அவர்களை நல்ல நூல்களைப் படைக்கச் சொல்லி ஊக்கப்படுத்தலாம். இதன்மூலம், நம் பிள்ளைகளை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் உருவாக்கலாம். 

அன்பால் அழகாகும் வீடு

செங்கல்லும், மணலும், சிமென்ட்டும், மொசைக்கும், மார்பிளும் கொண்டு கட்டப்பட்ட ஆடம்பரமான வீட்டை அழகான வீடு என்று சொல்லலாம். ஆனால் அன்பும், அமைதியும், சந்தோஷமும் அந்த வீட்டினுள் நிறைந்திருந்தால்தான் அதை நல்ல இல்லம் எனச் சொல்ல முடியும். அந்த நல்ல இல்லத்தை உருவாக்குவது பெண்களின் கையில்தான் உள்ளது. பெண்களால் முடியாதது என்ன இருக்கிறது? அந்தக் காலம்போல் இல்லையே இன்று. ஆகாயத்தில்கூடப் பறக்கக்கூடிய திறன் பெற்றவர்களாக அல்லவா இருக்கிறார்கள், இன்றைய பெண்கள். ‘ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே’ என்பார்கள். அதுபோல் வாழ்ந்துகாட்டினால்தானே சிறப்பு. தென்றல் போன்ற வாழ்க்கையில் அவ்வப்போது சிறிய புயலோ அல்லது பெரிய புயலோ யார் மூலமாக  வேண்டுமானாலும் வீச ஆரம்பிக்கலாம். அதற்கெல்லாம் பெண்கள் ஒடிந்து சாய்ந்துவிடக் கூடாது. நாணல்போல வளைந்து கொடுத்து, பின் நிமிர்ந்து நிற்க வேண்டும். யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப  கடவுள் கைம்மாறு செய்வார் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக, எதையும் மன உறுதியோடு வெல்ல வேண்டும். அதற்காக,  தீமை நம்மை வென்றுவிடக் கூடாது. நன்மையால்தான் நாம் தீமையை வெல்ல வேண்டும். 

நம் உயர்வு நம் கையில்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் சிலர் ஜாதகம் பார்ப்பதற்காக, நல்ல பொழுதுகளையெல்லாம் வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். திருமணத்தின்போது ஜாதகம் பார்ப்பதுகூட மன திருப்திக்காகத்தான். ஆனால் காலம் முழுவதும் அதற்காகவே காத்திருப்பது முட்டாள்தனம். ஆகையால், அவரவர் செயல்தான் அவரவர் வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்துமே தவிர, பிறரால் எந்த நன்மையும் இல்லை. பிறரால் பிறர் வாழ்க்கையை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆகையால், ஒவ்வொரு பெண்ணும் கிடைக்கும் வாய்ப்புகளைச் சாதகமாக்கி, அதை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டு, ‘நமக்கு அதிர்ஷ்டமில்லை’ என்று சொல்வது வேடிக்கையானது. ஓடும் நதியில் எத்தனை கற்கள் விழுந்துகொண்டிருந்தாலும், நதி எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் வழியில் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதுமட்டுமல்லாமல், தான் செல்லும் வழிகளையெல்லாம் வளமாக்கி, செழிப்பாக்கிக் கொடுக்கும். அதுபோல நாமும் எதையும் கண்டுகொள்ளாமல் நல்லதை நினைத்து நன்மையைச் செய்தால், நாமும் நலமாய் வாழ்வதுடன், பிறரையும் நலமாய் வாழச்செய்து, நல்ல பாதையில் பயணிக்க முடியும். 

இல்லத்து அரசர்களுக்கு 

இன்று நமது நாட்டில் 30 வயதிலும் 40 வயதிலும் பல பெண்கள் தங்கள் கணவரை இழந்துள்ளார்கள். சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டுத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? மூலைக்கு மூலை தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் மதுவே காரணம். அளவுக்கு மீறி குடிப்பது, தொடர்ந்து பல வருடங்களாகக் குடித்துக்கொண்டே இருப்பது போன்றவற்றால் கல்லீரல் கெட்டு உடல் ஆராக்கியம் இழந்து இளம்வயதிலேயே இறந்துபோகிறார்கள். இதனால் குடும்ப பாரம் முழுவதும் பெண்களின் தலையில் விடிகிறது. 

குடும்பம் என்பது படகு போன்றது. இதில் நான், நீ என்ற கருத்து பேதமின்றி கணவனும், மனைவியும் ஒரே பாதையில் பயணத்தைத் தொடர்ந்தால்தான், படகு இலக்கை அடையும். நம்மோடு பயணிக்கும் நம் பிள்ளைகளும் நலம் பெறுவர். எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சியடைகின்றன. எங்கே மதிக்கப்படவில்லையோ, அங்கே எல்லாச் செயல்களும், முயற்சிகளும் வீணாகிவிடுகின்றன. அதனால்,  ஆண் களே  தாய்,  சகோதரி,   மனைவி  என்று

உங்களைச் சுற்றி இருக்கும் பெண்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!