day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அவலில் இருக்கு அளவில்லா சத்து

அவலில் இருக்கு அளவில்லா சத்து

குழந்தைகளுக்கு வீட்டிலேயே சத்தான பல சிற்றுண்டிகளைச் செய்யலாம். அதில் நான் முதலில் பரிந்துரைப்பது தானிய வகைகள். அவை மிகவும் சத்தானவையும்கூட. கம்பு, கேழ்வரகு, தினை, சிவப்புச் சோளம், வெள்ளைச் சோளம் என எல்லாவற்றையும் தனித் தனியாகவும் கொடுக்கலாம் எல்லாவற்றையும் கலந்தும் செய்யலாம். ஆனால், தனியாகச் செய்வது நல்லது.

முதலில் ராகி, வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை இரண்டையும் தனித்தனியாக  வெறும் வானொலியில் வறுத்து ஆறவைத்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் வெல்லம் சேர்த்து ராகி இனிப்பு உருண்டை செய்யலாம். இதுபோல் கம்பு சேர்த்தும் செய்யலாம். வறுக்கும்போது எண்ணெய் சேர்க்காமல் உருண்டை பிடிக்கும்பொழுது நெய் சேர்க்கலாம். இதைச் செய்ய 30 நிமிடங்களே எடுக்கும். ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிடலாம். கம்பு, ராகி, வரகு, சாமை, தின, குதிரைவாலி  என எல்லாவற்றிலும் செய்யலாம். அனைத்தையும் நன்றாக வறுப்பது அவசியம்.  இல்லையென்றால் ஜீரண பிரச்சனைகளை உண்டுபண்ணும்.

 

சிறுதானிய கொழுக்கட்டை

 

சமைத்து கொடுப்பது போல் வேண்டும் என்றால் கொழுக்கட்டைகளாகச் செய்யலாம். காரம், இனிப்பு என்று எப்படி வேண்டுமோ செய்யலாம். காரக் கொழுக்கட்டை என்றால் எண்ணெய்யில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, வறுத்து அரைத்த மாவை மீண்டும் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.  பின் அதில் சின்ன சின்ன தென்காசி சுகள்கள் சேர்த்துக் கொழுக்கட்டை பிடித்து வேகவைத்துச் சாப்பிடலாம்.

 

இனிப்புக் கொழுக்கட்டை செய்ய நெய்யில் முந்திரிப் பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பின் பொடித்த ஏலக்காய் சேர்த்து  ஓரமாக வைத்து விடுங்கள். பின் அதே பாத்திரத்தில் ஒரு கப் மாவிற்கு அரை கப் வெல்லம் என்ற பங்கில் வெல்லம் சேர்த்துத் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாகக் கிளறி அதை மாவில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்துகொள்ளுங்கள். அந்த மாவைக் கொழுக்கட்டைபோல் பிடித்து வேகவைத்துச் சாப்பிடலாம். இதை அரிசி மாவிலும் செய்யலாம். சம்பா அரிசி, மூங்கில் அரிசி, சுங்கா அரிசி போன்றவற்றின் மாவுகளிலும் செய்யலாம்.

 

பழ பஞ்சாமிர்தம்

 

காய்கறிகள் வைத்தும் சுவையான குழந்தைகள் விரும்பும் சிற்றுண்டிகள் செய்யலாம். குழந்தைகளுக்குப் பிடித்த பழங்களை நன்றாகப் பஞ்சாமிர்தம் போன்று அரைத்து அல்லது பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளரிக்காய் எடுத்து அதில் நடுவே உள்ளதை மட்டும் எடுத்து விட்டு அதில் இந்த பஞ்சாமிர்தம் போன்ற பழச் சாற்றை நிரப்பிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் பார்க்க அழகாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.

 

நம்முடைய பாரம்பரிய சிற்றுண்டிகள் பல உண்டு. அவற்றை நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பால் பணியாரம் மிகவும் சுவையான சத்தான உணவு. அரிசி மாவில் உப்புத் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சீடை போன்று சின்ன சின்னதாக உருட்டி இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து அதனை வெல்லப் பாகு அல்லது தேன் மற்றும் பழங்களுடன் சேர்த்துக் கொடுக்கலாம். பழங்களை அதிகம் விரும்பி உண்ணாத குழந்தைகளுக்கு அதனை அலகாரப்படுத்திக் கொடுக்கலாம். ஒரு பாத்திரத்தில் சூடு நீர் வைத்து அதில் ஒரு கிண்ணத்தில் Dark Chocolate வைத்து உருக்கி அதைப் பழங்களில் ஊற்றி உருவம் போல் செய்து கொடுக்கலாம். இப்படிச் சிறு வயதில் இருந்தே பழங்களைக் கொடுத்துப் பழக்குவது நல்லது. ஆப்பிள், கொய்யாப்பழம், பப்பாளி, வாழை போன்ற பழங்களை அதிகமாகக் கொடுக்கலாம். அதை அழகாக கொட்டைகள் வைத்து அலங்கரித்துக் கொடுத்தால் உடலுக்கும் நல்லது, பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

 

சிறுதானிய  பணியாரம்

 

அடுத்து அவல் வைத்து நாம் நல்ல சிற்றுண்டிகள் செய்யலாம். உடலுக்கும் நல்லது. அவலை நன்றாகக் கழுவி ஊறவைத்து இனிப்பு, காரம், உப்புமா என்று பல விஷயங்களைச் செய்யலாம். அதில் கொஞ்சம் பாதாம் , முந்திரி, திராட்சை  அனைத்தும் சேர்த்துக் கொடுக்கலாம் அல்லது அவலைப் பழங்களுடன் சேர்த்துச் செய்யலாம் அல்லது வெல்லம் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொடுக்கலாம்.

 

ராகி, கம்பு, சாமை, தினை அனைத்திலும் பணியாரம் செய்யலாம். இனிப்பு, காரம் என இரண்டு வகையும் செய்து கொடுக்கலாம்.  மாவில் வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொட்டி அதனைப் பணியாரக்கல்லில் ஊற்றி நன்கு சிவந்த பின் எடுத்து கார சட்னியுடன்வைத்துக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி உண்ணுவார்கள்.

 

இதேபோல் மாவில் வெல்லப்பாகு சேர்த்துப் பணியாரம் சுட்டுக்கொடுத்தால் இனிப்பை விரும்பும் குழந்தைகள் நன்றாகச் சாப்பிடுவார்கள். அதனுடன் முந்திரி, வேர்க்கடலை,  ஏலக்காய் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அடுத்து ரோல் வகைகள். சப்பாத்தி செய்யும் பொழுது கீரையை (பாலக்கீரை, வெந்தயக்கீரை) பொடியாக நறுக்கி  வதக்கி உள்ளே வைத்துச் சுட்டுக் கொடுக்கலாம். காய்கறி, பழங்கள், சிறுதானியங்கள் முதலியவற்ற்றைச் சிறுவயதில் இருந்தே பழக்கிவிட்டால் குழந்தைகள் வளர அவை மிகவும் உதவியாக இருக்கும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!