day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

குழந்தைகளிடம் ‘நோ’ சொல்லுங்கள் – டாக்டர் வந்தனா

குழந்தைகளிடம் ‘நோ’ சொல்லுங்கள் – டாக்டர் வந்தனா

முதலும் இல்லாதது முடிவும் இல்லாதது காதல் என்று கவிகள் புகழ்வார்கள். ஆனால், காதலில் ஏற்படுகிற சிக்கல்கள் அப்படியல்ல. அவற்றின் தொடக்கத்தைச் சரியான விதத்தில் அணுகினால் நல்லவிதமாகத் தீர்வும் காணலாம். அப்படியான சில கேள்விகளுக்கு விடையளிக்கிறார் உளவியல் ஆலோசகர் வந்தனா.
கேள்வி: காதலால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவது எதனால்?
காதலால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், பாதிக்கப்படுவதில் பெண்கள்தான் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாதிப்பு என்பது இருவருக்குமே ஒன்றுதான். ஆனால், காதலில் முறிவு என்று வரும்போது பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவதால், அதனால் ஏற்படுகிற பாதிப்பு ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாகவே ஏற்படுகிறது. பொதுவாக ஆண்கள் எந்த ஒரு உணர்வையும் அவ்வளவு எளிதாக வெளிப்படுத்த மாட்டார்கள்
கேள்வி: முகம் பார்த்து வருகிற காதலே சில நேரம் முறிவில் போய் முடிகிறது. அப்படியிருக்கும்போது, அண்மை காலமாகச் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பெண்களிடம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. அதிலேயே சிலர் குறுந்தகவல்களைப் பரிமாறிக் காதலை வளர்த்துக்கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
பதில்: எல்லோரும் தற்போது ஆன்லைனை நோக்கிச் செல்வதால், பெரும்பாலான உறவு முறைகளும் ஆன்லைனை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் செயல்படுவது மிக எளிது. தவிர, வேகமாக ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்ளவும் இவை உதவுகின்றன. அதேபோல பள்ளி, கல்லூரி மாணவர்களும், டீன் ஏஜ் வயதினரும் இதில் ரொம்ப சுதந்திரமாக இருப்பதால் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே உள்ளது. எவ்வளவு வேகமாக ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்கிறார்களோ, அதே வேகத்தில் அதில் இருந்து வெளியில் வரவும் முயல்கிறார்கள். உணவில் இருந்து எல்லாமே இப்போது நமக்கு உடனடியாகக் கிடைப்பதால், எதிலுமே உடனடி ரிசல்ட்டை எதிர்பார்க்கிறோம். ஆனால், உறவு முறை என்பது அப்படியில்லை. சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் ஒருவித ஈர்ப்பினால் ஏற்படுவதுதான். ஆனால், அது உண்மையான நட்பா என்று சொல்ல இயலாது. ஒவ்வொரு காலகட்டத்திற்குத் தகுந்தாற்போல் காதல் என்பது வேறுபடுகிறது. அந்தந்த காலகட்டத்தை அவர்கள் கடந்து செல்லும்போதுதான் அது உண்மையாக இருக்கிறது. அப்படியில்லை என்றால் அதை ஒருவிதமான கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அது இல்லாமல் அந்த நட்புக்குள் எவ்வளவு வேகமாகப் போகிறார்களோ அதே வேகத்தில் திரும்ப வந்துவிடுகிறார்கள்.
கேள்வி: இப்பொழுது இருக்கிற தலைமுறையினரில் சிலர் எதையும் ‘டேக் இட் ஈஸி’என்று ரொம்ப சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே நேரத்தில் இன்னொரு தரப்பினரோ சிறு தோல்விக்கே உடைந்துவிடுகிறார்கள். எதனால் இப்படி இருக்கின்றனர்?
பதில்: இன்றைய தலைமுறையினர் எதையும் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்க்கிற ஒன்று கிடைக்கவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அவர்களிடம் குறைவு. சிலர் அதற்காகத் தற்கொலை வரைக்கும்கூடச் செல்கிறார்கள். அது மிகவும் தவறான முடிவு. ஆனால், ஒருவர் திடீரெனத் தற்கொலை செய்துகொள்வதில்லை. தற்கொலைக்கு முயற்சிக்கிறார் என்றால் ஆரம்பத்தில் இருந்தே மனச்சோர்வுடன் இருந்திருப்பார். உதாரணத்துக்கு நாம் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லையே என்று தவறான முடிவுக்குச் சென்றால், அதற்கு அதுமட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே மனச்சோர்வுடன் தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் இருந்திருக்கலாம். ‘ஈஸி கோயிங்’ என்று இருக்கிற இந்தக் காலத் தலைமுறையினரிடையே நினைத்தது கிடைக்காமல்போகும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை என்றால் அவர்கள் வளர்ந்துவந்த பாதையைப் பார்க்க வேண்டும்.
கேள்வி: காதல் தோல்வியிலோ அல்லது வேறு ஒரு மனச்சோர்விலோ இன்றைய தலைமுறையினர் இருக்கும்போது, அவர்களுடைய பெற்றோர் எந்த வகையில் அவர்களுக்கு உதவலாம்?
பதில்: ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்று தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. சிறுவயதில் இருந்து ஆசைப்பட்டது எல்லாம் கிடைத்துவிட்டதா என்ன? காதலுக்கு மட்டுமே என்று நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. வெற்றியோ, தோல்வியோ எது நடந்தாலும் பெற்றோர் மட்டுமல்ல நண்பர்கள், உறவினர்கள், இந்தச் சமூகம் என்று எல்லோரும் எப்படி உதவுகிறார்கள் என்பதுதான் முக்கியம். இதுபோன்ற நேரத்தில் எல்லோரும் உதவியாகத்தான் இருப்பார்கள். இதுதான் ‘END’ என்று எடுத்துக்கொள்ளாமல் இது ஒரு ‘BEND’ தான் என்பதை அவர்களுக்கு இதுபோன்ற நேரத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் எடுத்துச்சொல்ல வேண்டும். அதேபோல் அவர்களுக்கு உணர்வுரீதியான, உளவியல் ரீதியான அரவணைப்பைக் கண்டிப்பாகக் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நிறைய தகவல்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தெரியாமலேகூட இருக்கிறது. கிடைக்காத ஒன்றுக்காகத்தான் நம் குழந்தை இவ்வளவு பாடுபட்டிருக்கிறது என்பது சில நேரம் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஒருவேளை நண்பர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கலாம். அவர்கள்கூட எடுத்துச் சொல்லியிருக்கலாம் அல்லது அவர்கள் ஒரே வயதுடையவர்களாக இருக்கும் காரணத்தால் அதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். உதாரணத்துக்கு இந்த கொரோனா காலகட்டத்தில் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பே பறிபோனது. வேலை இல்லாமல் பலர் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேலை போய்விட்டதே என்பதற்காக மட்டுமே பலர் இதுபோன்ற தவறான முடிவுக்குச் சென்றார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. இதற்குமுன் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை அவர்கள் சந்திக்காமல் இருந்திருக்கலாம் அல்லது இதுபோன்ற ஒரு நேரத்தில் அதற்கான தீர்வு காணாமல் இருந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல் இதுபோன்ற நேரத்தில் ஒரு ரோல்மாடல் கிடைக்காமல் இருந்திருக்கலாம். இதுபோன்ற நேரத்தில் குடும்ப உறுப்பினர்களாகிய நாம் கண்டிப்பாக முழு ஆதரவு கொடுக்க வேண்டும். நம்மை யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா என்பதுதான் தற்கொலை முயற்சிக்கான காரணம். இந்த நேரத்தில் குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் கிடைத்தால் அவர்களை எளிதில் காப்பாற்றிவிட முடியும்.
கேள்வி: முடிந்த அளவுக்குக் குடும்பத்தில் இருந்து எல்லாவிதமான ஒத்துழைப்புக் கொடுத்தும் சிலர் மனரீதியான பாதிப்பில் இருந்து வெளிவருவதில்லையே ஏன்?
பதில்: உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். இது மிடில் கிளாஸ், லோ கிளாஸ், பொருளாதாரப் பாகுபாடு, ஆண், பெண் என்று வித்தியாசம் பார்த்துவருவதில்லை. ஒரு விஷயத்தை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பது அவரவர் ஆளுமையைப் பொருத்தது. நீங்கள் வளர்ந்துவந்திருக்கிற முறைதான் உங்கள் ஆளுமையைத் தீர்மானிக்கும். உங்களது உறவினர்கள், சுற்றத்தார் மற்றும் கல்விமுறைதான் ஒருவருடைய ஆளுமையையும் நடத்தையையும் தீர்மானிக்கின்றன. பெற்றோர் துணையாக இருந்தும்கூட அவர்களால் மனச்சோர்வில் இருந்து விடுபட இயலவில்லை என்கிறபோது, முறையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியம். இரண்டாவது, பெற்றோரால் கவுன்சலிங் செய்ய முடியாது. பெற்றோர் கவுன்சலிங் செய்யும்போது, தங்களுக்கு எதிராகத்தான் இவர்கள் செயல்படுவார்கள் என்ற எண்ணம் குழந்தைக்குத் தோன்றும்.
கேள்வி: மனநல மருத்துவரையோ ஆலோசகரையோ அணுகுவது நடுத்தர வர்க்கத்தினருக்கு எப்படிச் சாத்தியமாகும்?
பதில்: பெரும்பாலும் எல்லா மருத்துவக் கல்லூரியிலும் மனநல மருத்துவத்துறை இருக் கிறது. மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள வர்கள், உடல்நிலை சரியில்லை என்றால் எப்படிக் கடன் வாங்கியாவது அதைச் சரிசெய்கிறார்களோ அதேபோல மனசு சரியில்லை என்றபோது, அந்த நேரத்தில் அதற்குக் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான புரிதல் இல்லாததால்தான் இதுபோன்ற சிக்கல் வருகிறதே தவிர, பொருளாதாரத்தால் அல்ல. மனநலம் சம்பந்தமான பிரச்சினையில் பெரும்பாலான பெற்றோர்கள், உடனடியாக இதற்கு ஒரு தீர்வு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மனநலம் சார்ந்த பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாது. பொறுமையுடன் சிகிச்சை பெற்றுவந்தால் கண்டிப்பாக மனநல சிக்கலில் இருந்து விடுபடலாம்.
கேள்வி: மனநலம் சார்ந்த பிரச்சினை வராமல் இருப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும்?
பதில்: மனநலப் பாதிப்பைத் தவறான விஷயமாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும். என்னிடம் வரும் பெரும்பாலானோர் தங்கள் பிள்ளைகள் மொபைலுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இதை முற்றிலும் நிறுத்த முடியுமா என்றால் முடியாது. இன்றைய காலகட்டத்தில் மொபைல் என்பது அத்தியாவசியப்பொருளாக மாறிவிட்டது. இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம். அதை உபயோகப்படுத்தும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து மொபைலைப் பயன்படுத்தினால் என்ன பாதிப்பு ஏற்படுமோ அதை அவர்களுக்கு நாம் விளக்கிச் சொல்ல வேண்டும். அதேபோல் இதற்கான மாற்றுவழிகள் இருப்பதையும் அவர்களுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். ஒரு விஷயத்துக்கு அடிமையான பிறகு நாம் சொல்லிப் புரியவைக்க முடியாது. ஆரம்பத்திலேயே அதைப் புரியவைக்க வேண்டும்.
கேள்வி: பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்வதால், குழந்தைகளுக்குப் போதிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் மூன்றாம் நபரைத் தேடிச் செல்லக்கூடிய கட்டாயம் ஏற்படுகிறதா?
பதில்: பெரும்பாலானவர்கள் இதுபோன்ற கருத்தைத்தான் முன்வைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஒரு துறையைச் சார்ந்தவர்களை வைத்துக்கொண்டு நாம் இதுபோன்று சொல்ல இயலாது. வேறு நடவடிக்கைகளும் இதில் சம்பந்தப்படுகிறது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளைக் கண்காணிப்பது வேண்டுமானால் முன்னே பின்னே இருக்கலாம். அவர்களிடத்தில் அன்பைப் பரிமாறிக் கொள்ள நேரம் கிடைக்காமலும் போகலாம். ஆனால், தாய், தந்தையர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில்கூடக் குழந்தைகளைக் கண்காணிக்கிறார்கள். அவர்களோடு நிறைய நேரம் செலவிடுகிறார்கள். இதுபோன்ற குடும்பங்களும் இருக்கத்தான் செய்கிறது. உயர்மட்டத்தில் இருக்கிறவர்களில் இரண்டு பேரும் வேலைக்குச் செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதேபோல, நடுத்தரக் குடும்பத்திலும் இரண்டு பேரும் வேலைக்குச் செல்பவர்களாத்தான் இருக்கிறார்கள் ஏன் அங்கெல்லாம் இதுபோன்று நடப்பதில்லை. இதுமட்டுமல்லாமல் வேறு சில காரணங்களும் இருக்கிறது. அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு குழந்தை உடல் அளவில் பாதிப்பு ஏற்படும்போது எப்படி அருகில் இருந்து பார்த்துக்கொள்கிறீர்களோ அதேபோன்று மனதளவில் பாதிப்பு ஏற்படும்போதும் அருகில் இருந்து பார்த்துக்கொண்டு அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
கேள்வி: ரொம்ப செல்லம் கொடுக்கிறோம் அல்லது ரொம்ப கண்டிப்பாக இருக்கிறோம். அதனால்தான் குழந்தைகள் பாதை மாறிப் போகிறார்கள் என்கிறார்களே. அதற்கு என்னதான் தீர்வு?
பதில்: குழந்தைகள் வளர்ப்பு என்பது பெற்றோருக்குப் பெற்றோர் மாறுபடும். பொருளாதாரரீதியாக பாதிப்பில் உள்ள குடும்பத்திலும் சரி, பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது தாய், தந்தை யாராவது ஒருவரின் நேரடிப் பார்வையில் வளரும் குழந்தையாக இருந்தாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தை வளர்ப்பு என்பது வேறுபடும், மாறுபடும். அதனால்தான் ரொம்ப கண்டிப்புடனும், செல்லத்துடனும் குழந்தைகளை வளர்க்கக் கூடாது. இதில் அடுத்தவரைப் பின்பற்றவும் முடியாது. பொதுவாகக் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டுமோ அதேபோல் வளர்த்தால் போது மானது.
குழந்தைகளிடம் நட்பு டன் பழக வேண்டும். அவர்களுடன் போது மான நேரத்தைச் செலவிட வேண்டும். ஒரு குழந்தையுடன் மற்றொரு குழந் தையை ஒப்பிடக் கூடாது. அதேபோன்று குழந்தைகள் சில வற்றைக் கேட்டால் மறுக்கவும் வேண்டும். எல்லா நேரமும் எல்லாமே கிடை க்கும் என்பது நல்லதல்ல.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!