day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வன்முறையைத் தூண்டும்கோபம் தேவையா?

வன்முறையைத் தூண்டும்கோபம் தேவையா?

“அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்

அதிகமா கோபப்படுற பொம்பளையும்

நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை”

 

இது ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் சொல்லும் டயலாக். அது என்ன? அதிகமா கோபப்படுகிற பொம்பளை? ஆண்கள் கோபப்படுவதில்லையா? ஆண்களின் கோபத்தின் வலிமை எவ்வளவு கொடியது என நாம் பார்க்கிறதில்லையா? பின் ஏன் பெண்கள் கோபப்படக்கூடாது என்று அறிவுரை கூறப்படுகிறது. பல வீடுகளில் கோபம் தலைக்கேறிய கணவர்கள் மனைவியரை அடித்து துவம்சம் செய்வதைப் பார்த்திருப்போம். ஏன் அடித்தாய் என்று கேட்டால் கோபத்தில் அடித்துவிட்டேன் என்று பதில் வரும். அப்படி என்றால் பெண்கள் கோபப்படக்கூடாதா? வழக்கம்போல் அறிவுரை பெண்களுக்குத்தான். உடல் பலம் கொண்ட ஆண் கோபப்பட்டால் பாதிக்கப்படுவது உடல் பலகீனமான பெண்தான். ஆணுக்கு இணையாகக் கோபப்பட்டால் சேதாரம் பெண்ணுக்குத்தான் அதிகம் என்பதால் பெண்ணுக்கு அறிவுரை வழங்கப்படுகிறதோ என்னவோ. சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். உண்மையில் கோபம் என்பது என்ன? அது தேவைதானா என்பது பற்றி நாம் அறிந்து கோபத்தைக் கையாளும் பயிற்சியை மேற்கொண்டால் கோபத்தின் பின் விளைவுகளிலிருந்து  தப்பித்துக்கொள்ளலாம்.

கோபம் பொங்கி வரும்போது சிலர் தங்கள் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். தாக்க வரும் ஜல்லிக்கட்டு காளைபோல உணர்ச்சி வசப்படுகிறார்கள். பொதுவாக சிலர் கோபப்படுவதற்கு ஏதாவது காரணத்தை மட்டுமே தேடுகிறார்கள். இன்னும் சிலருக்கு கோபத்திலும் ஒரு போதை இருக்கிறது. இக்குறையுள்ளவர்கள் ஒன்றுமில்லாததற்கெல்லாம் கோபப்படுவார்கள். தன் அகந்தைக்குத்தீனி போட அவர்கள் மற்றவர்களை காயப்படுத்துகிறார்கள். அவர்கள் கோபத்தால் சக்தி மட்டுமல்ல புத்துணர்ச்சியும் பெறுகிறார்கள். சில நேரங்களில் கோபப்படுகிறான். நிதானம் திரும்பியதும் மறுபடியும் கோபப்படும் அவலமும் அரங்கேறுவதை நாம் பார்த்திருக்கிறோம். நான் ஏன்தான் இப்படி கோபப்பட்டேனோ என்று தன்மீது கோபம் அதிகரிக்க தன் உடலைக் கீறிக்கொண்ட சம்பவமும் உண்டு. சமூகத்தைப் பாதுகாக்க சட்டபூர்வமான வன்முறைகளையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். நம் நாட்டைப் பாதுகாக்க நாம் போருக்குச் செல்கிறோம். எதிரியை பயமுறுத்துவதுதான் போரின் நோக்கமாக இருக்கிறது. எவ்வளவு விரைவில் படையைத் திரட்டி எதிரி மேல் போர் தொடுக்கிறோமோ அவ்வளவு விரைவில் போர் முடிவுக்கு வரும். ஆனால், அன்றாட வாழ்வில் நாம் போர்க்களத்தில் இல்லை. அலுவலகத்திலோ, வீட்டிலோ அல்லது படித்துக்கொண்டோதான் இருக்கிறோம். பிரச்னைகளுக்கெல்லாம் கோபம் தீர்வாகாது. அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மையே பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடி தரும் ஆயுதங்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கோபத்தை ஆயுதமாக எடுப்பவர்களிடம் இருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்?

அதிக கோபத்தால் வன்முறையைத் தூண்டுபவர்களிடம் இருந்து தள்ளி இருப்பதுதான் சிறந்த வழி. விவாதிப்பதால் ஒரு பயனும் இருக்காது என்ற நிலை உருவாகும்போது தர்க்கம் செய்யாமல் விலகி இருப்பதே சிறந்தது.

உறுதியுடன் கோப நடத்தையை எதிர்த்திடுவதும் நல்லது. அதே வேளை கோபப்படுபவரின் நடத்தையை எதிர்க்க வேண்டுமே தவிர அந்த மனிதரை அல்ல. ஏதாவது ஒரு போதைக்கு அடிமையானவரா என்பதை நாம் அறிந்து கொள்வது நல்லது. போதைக்கு அடிமையான பலர் கோபப்படுபவர்களாக இருந்தாலும் கோழைகளாகவும், பலவீனமானவர்களாகவுமே இருப்பர்.

 நம் நெருங்கிய உறவினர் இவ்வாறு கோபப்படும்போது சிறிது நேரம் வெளியே அழைத்துச் செல்வது நல்லது. சிறு குழந்தைகளிடம் இந்த உத்தி பயன்படும். கோபப்படுபவரை சமாளிப்பது என்று முடிவு செய்தால் அதன் விளைவுகளை அவர் அனுபவிக்கட்டும் என விட்டுவிட வேண்டும். கொஞ்சமாவது அனுபவித்தால்தான் அப்படிப்பட்டவர்கள் திருந்த வாய்ப்புண்டு. அடுத்தமுறை இதேபோல் கோபப்பட்டால் நான் பேசவே மாட்டேன் என்று சொல்லவும். அதைமீறினால் சொன்னதை நிறைவேற்றவும் வேண்டும். எல்லா முயற்சிகளும் தோற்றுவிட்டால் கோபப்படுபவரின் பக்கமே செல்லாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!