day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நான் அடிமை அல்ல … !

நான் அடிமை அல்ல … !

 

குழந்தைப் பருவம் முதலே கொத்தடிமையாக இருந்தவர், இன்று அதிலிருந்து மீண்டு தன்னைப் போலவே சுழலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டிவருகிறார். வெளி உலகமே தொியாமல் இன்னும் கொத்தடிமைகளாக இருக்கும் இருளர் மக்களை வெளி உலகுக்குக் கொண்டு வருவதையே லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார் சகுந்தலா.

இவருடைய பெற்றோர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தனர். அவருக்கு 6 வயது இருக்கும்போது செங்கல் சூளையில் கூலி வேலை செய்யத் தொடங்கினார். அப்போது சீருடையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்தது. அதைப் பெற்றோரிடம் சொல்ல, அவர்களோ செங்கல் சூளை உாிமையாளர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று மறுத்தனர். இருந்தாலும் மகளின் விடாப்படியான முயற்சியால் செங்கல் சூளை உாிமையாளரிடம் அனுமதி கேட்டனர். அதற்கு அவர் சில வேலைகளைச்  சொல்லி அவற்றையெல்லாம் முடித்துவிட்டுப் பள்ளிக்குப் போகச் சொன்னார். நாள் முழுக்க முதுகொடிய செய்த வேலைகளால் சகுந்தலாவால் பள்ளிக்குப் போக முடியவில்லை. பின்னர் ஒரு வழியாக காலையில் வேலையை எல்லாம் முடித்துவிட்டுத்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று செங்கல் சூளை உரிமையாளார் கட்டுப்பாட்டுடன் அனுமதித்தார்.

காலைல விடிவதற்கு முன்பே எழுந்து வேலைகளை எல்லாம் முடித்துவிடுவேன். ஆனால், அவர்கள் அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். சாப்பிடுவதற்குக்கூட நேரம் இருக்காது. குடும்பமே வேலை செய்தாலும் வாரத்துக்கு ரூ.150 அல்லது ரூ.200 மட்டுமே கூலியாகக் கொடுத்தார்கள். எனக்கு விவரம் தொிஞ்ச வரைக்கும் நாங்க எதுவும் அட்வான்ஸ் வாங்கியதாக ஞாபகம் இல்லை. என் திருமணத்திற்காக என் அப்பா பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸாக வாங்கினார். அந்தப் பணத்தைத் திரும்பக் கட்ட முடியவில்லை. அதற்குப் பதிலாக அங்கேயே கூலி வேலை செய்துவந்தோம்என்று சொல்கிறவரின் வாழ்க்கை திருமணத்துக்குப் பிறகும் விடியவில்லை. புகுந்தவீடும் இவருக்குக் கொத்தடிமை வாழ்க்கையைத்தான் பரிசாகக் கொடுத்தது.

சகுந்தலாவும் அவரது கணவரும் செங்கல்சூளையில்தான் வேலை செய்தனர். “என் பசங்களுக்குப் பத்து வயது ஆனபோதுகூட கடன் அடையவில்லை என்று அங்கேயேதான் வேலை செய்தோம். இவ்வளவு வருஷம் வேலை செய்தும்கூடவா பத்தாயிரம் ரூபாய் கடன் அடையவில்லை என்று கேட்டபோது இன்னும் பாக்கி இருக்குன்னு சொன்னாங்க. பத்தாயிரம் ரூபாய்க்கு 20 வருஷத்துக்கும் மேல கொத்தடிமையா  வேலை செய்தோம்என்று சொல்லும் சகுந்தலா தாங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த கொடுமைகளைப் பட்டியலிட்டார்.

இங்கே வேலை நேரம் என்பது கிடையாது. எப்பொழுதெல்லாம் கூப்பிடுகிறார்களோ அப்போதெல்லாம் நடுராத்திரி என்றாலும் எழுந்து சென்று வேலை செய்ய வேண்டும். தூங்கும் நேரம் மிகவும் குறைவுதான். வெயிலடித்தாலும் மழை பெய்தாலும் வேலைக்கு விடுப்பு இல்லை. மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. செங்கல் அறுக்கும்போதெல்லாம் விடியற்காலையில் இரண்டு மணிக்கெல்லாம் சென்றுவிட்டு காலை 9 அல்லது 10 மணிக்குத்தான் வீடு திரும்புவோம். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தூங்குவதே அதிசயம்தான். சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்றால்கூட விடமாட்டார்கள். நான் ஒருமுறை சென்று கணக்கு கேட்டேன். வாங்கிய பணத்துக்கு இன்னும் எத்தனை நாள்தான் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு நாகூசும் தகாத  வார்த்தைகளால் திட்டிவிட்டார்கள். இதைத் தட்டிக் கேட்ட எனது கணவருக்கும் செங்கல் சூளை ஓனருக்கும் கை கலப்பு ஏற்பட்டது. அந்தக் கோபத் தில் என் கணவர் என்னையும், என் குழந்தை களையும் செங்கல் சூளையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்என்று வேதனையோடு பகிர்ந்துகொண்டார் சகுந்தலா

அதன் பின்பு  சகுந்தலாவும் அவரது குழந்தைகளும் மூன்று வருடங்களாக அங்கேயே இருந்தனர். குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டே அங்கே வேலை செய்தார். குழந்தைகளுக்காக செங்கல் சூளையில் நடந்த கொடுமைகளைச் சகித்துக்கொண்டார். சகுந்தலா கோவில் திருவிழா ஒன்றுக்குச் சென்றார். அது அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. தன்னைப் போலவே கொத்தடிமையாக வேலை செய்பவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிறவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டார் சகுந்தலா

அது எங்க இருளர்  சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும்விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு நலச்சங்கம்’. அங்கே ஒரு புகார் மனு கொடுத்தேன். சில நாட்கள் கழித்து அவர்கள் வந்து விசாரணை நடத்தியபோது, நாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது உறுதியானது

2016ஆம் ஆண்டில் மீட்கப்பட்டேன். அப்போதுதான் எனக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இருப்பதெல்லாம் தொியவந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு வேலை செய்தால் அதற்கு எவ்வளவு கூலி என்பதே அப்போதுதான் எனக்குத் ெதாிந்தது. இத்தனை ஆண்டுகளாக அவர்கள் கொடுப்பதுதான் கூலி, அவர்கள் சொல்வதுதான் உண்மை என்று நம்பியே இருந்துவிட்டோம்என்று சொல்லும்போது தங்களது அறியாமையைப் பயன்படுத்தித் தங்கள் உழைப்பைச் சுரண்டிய வலி தெரிந்தது.

 “செங்கல் சூளை ஓனருடன் நடந்த சண்டையில் ஊரைவிட்டுப் போன என் கணவர் திரும்ப வரவே இல்லை. என் பசங்களும் செங்கல் சூளையில் வேலை செய்தாங்க. அறுத்துபோடும் செங்கல்லை எல்லாம் காய வைப்பதற்காகத் திருப்பிப் போடும்போது கைகளில் எல்லாம் காய்ப்பு பிடித்து, சிராய்ப்பு ஏற்பட்டுப் புண்ணாக இருக்கும். அந்தப் புண்ணின் வலியும், வேதனையும் அவர்கள் சாப்பிடும்போதுதான் அதிகமாகத் தொியும். சாப்பிடக்கூட முடியாது. கையெல்லாம் எரியும். என்கிட்ட சொல்லி அழுவாங்கஎன்று சொல்கிறவரின் வாழ்க்கை, தான் மீட்கப்பட்ட பிறகே விடிந்திருக்கிறது.  

செங்கல் சூளை கொத்தடிமையில் இருந்து விடுபட்டு வெளியில் வந்தபோது ஆறு மாதங்களாக எங்கே செல்வது, என்ன வேலைக்குச் செல்வது என்று தவித்திருக்கிறார் சகுந்தலா. அதன்பின் ஒவ்வொன்றாகத் தொிந்துகொண்டார்

தன்னைப் போலவே கொத்தடிமையாக வாடுகிறவர்களை மீட்க வேண்டும் என்று கருதிவிடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு நலச்சங்கத்தில் உறுப்பினராக இணைந்தார்தொடர்ச்சியான பணியால் வேலூர் மாவட்டத் தலைவராகப் பதவி வகித்தார்

என்னுடைய தலைமையில் இப்படிக் கொத்தடிமைகளாக இருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரை மீட்டுள்ளேன். கொத்தடிமையாக இருந்து பட்ட துன்பமெல்லாம்தான் என்னை இந்த அளவுக்கு ஒரு பணியைச் செய்யத் தூண்டியது. நான் பட்ட கஷ்டத்தை இனி யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற ஒரு உறுதியோடுதான் இந்தச் சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். தற்போது தனியார் ஷூ கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன்என்று சொல்லும் சகுந்தலா தன் சமூக மக்களுக்கு அரசின் பல நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.  

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர் களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்கான ஏற்பாட்டுக்காக வேலூர் மாவட்ட கலெக்டரைச் சந்தித்து மனு கொடுத்தோம். ஆதார் கார்டு இல்லாமல் தவித்தவர்களுக்கு ஆதார் கார்டு கிடைக்கவும், முகவரி மாற்றம் செய்ய உதவியதற்கும் என்னை கலெக்டர், சப்கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினார்கள். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தந்தார்கள். நாங்கள் சென்று வருவதற்குப் பாதை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். அதற்கு உடனே ஏற்பாடு செய்துதந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சாதி சான்றிதழும் கொடுத்தார்கள். பொதுக்கழிப்பிடம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். அதற்கும் ஏற்பாடு செய்து தருவதாக கலெக்டர் கூறியுள்ளார்என்று சொல்லும் சகுந்தலா தன் மகன்களின் கனவு நிறைவேற காத்திருக்கிறார்

நான் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதற்குள்ளாக எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் மகன்களில் ஒருவனுக்கு மிலிட்டரியிலும் இன்னொருவனுக்கு போலீசிலும் வேலைக்குச் சேர ஆசை. அவங்களாவது நல்லா படிச்சி, நினைச்சதைச் சாதிக்கணும்னு ஆசைப்படுகிறேன்என்று நம்பிக்கையோடு முடித்தார் சகுந்தலா.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!