day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கல்லீரலைக்காக்கும் கறிவேப்பிலை – டாக்டர். வே.இரா.பிருந்தா

கல்லீரலைக்காக்கும் கறிவேப்பிலை – டாக்டர். வே.இரா.பிருந்தா


சாப்பிடும்போது நாம் வேண்டாம் என்று  தூக்கி ஏறிகிற கறிவேப்பிலையில் ஏராளமான பலன்கள் உண்டு. பொதுவாக உணவில் நறுமணத்தைக் கூட்டவும், சுவைக்காகவும்தான் கறிவேப்பிலை சேர்க்கப்படுகிறது  என அனைவரும் நினைத்துத் தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால், இந்தக் கறிவேப்பிலையைப் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொண்டால் வியந்துபோவீர்கள்

கறிவேப்பிலையில் வைட்டமின் , வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவு நிறைந்துள்ளன.இவை பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள். கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதைப் பச்சையாகத் தினமும் காலையில்  தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட உடலில் பல மாற்றங்கள் நடக்கும் என்று பட்டியலிட்டு உள்ளார்கள்

குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை அரைத்து உண்டு வந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து இடை சிறுக்கும். ரத்தசோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம்பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உண்டுவந்தால் ரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து ரத்தசோகை நீங்கும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையைப் பச்சையாக உண்டுவந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கருவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைப்பதோடு நல்ல கொழுப்புகளை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்

சளியில் இருந்து நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியைத் தேனில் கலந்து தினமும் குடித்துவந்தால் உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து வெளியே வந்துவிடும். மேலும், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றக்கூடிய திறன் கறிவேப்பிலைக்கு மட்டுமே உண்டு.கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் சி  கல்லீரலைப் பாதுகாத்து, சீராகச் செயல்பட உதவும். வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலைக் கறிவேப்பிலை தரும்.

குமட்டல் மற்றும் தலைசுற்றலுக்கு மிகச் சிறந்த தீர்வாகக் கறிவேப்பிலை சாறு இருக்கும். புற்றுநோயாளிக்கு கீமோதெரபியினால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைக்க கறிவேப்பிலை சாறு உதவுகிறது. தோலில் ஏற்படும் தொற்றுக்களையும் குணப்படுத்துகிறது. கண்பார்வையை மேலும் அதிகப்படுத்துகிறது. கறிவேப்பிலையை ஒதுக்குவதை விட்டுவிட்டு நாம் சாப்பிடுவதுடன் நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுத்து அதை உண்ண பயிற்சி அளிக்க வேண்டும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!