day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவதில் தி.மு.க.சளைத்தது அல்ல … – வளர்மதி

அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவதில் தி.மு.க.சளைத்தது அல்ல … – வளர்மதி

 

 

ைஹட்ரோ கார்பன், மீத்தேன், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பலமுறை சிறை சென்றவர் வளர்மதி. சிறையில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்களையும்,நெருக்கடிகளையும் கண்டு பயப்படாமல் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருபவர். களப் போராட்டங்கள், இயக்கம், படிப்பு  என சுழன்று கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

 “உங்களுடைய ஆரம்ப காலப் போராட்டமும்  வாழ்வும் குறித்து சொல்லுங்க ?”

“சேலம் மாவட்டம் வீராணம்தான் எனது சொந்த  ஊர். பெரியார் பல்கலைக் கழகத்தில் இதழியலில் முதுநிலை படிப்பை முடித்துள்ளேன். பள்ளியில் படிக்கும்போதே ஈழப் போராட்டத்தில் பங்கேற்றேன்.அந்தப் அடிப்படையில் தான் மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்கத் தொடங்கினேன்.முதன் முறையாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை படிக்கச் சென்றபோது அங்கு நடந்த ஊழல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தேன்.அதில்  மாணவர்களுக்கான  ஊக்கத்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்தினேன். அந்தப் போராட்டத்தில் முதன் முறையாகக் கைது செய்யப்பட்டேன். அதன்பிறகு ைஹட்ரோ கார்பன்,மீத்தேன், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பலமுறை சிறைக்குச் சென்றேன்.

“சிறையில் உங்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்து சொல்லுங்க?”

 நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது என்பதற்காக அங்குள்ள விவசாயிகள் போராட்டம்  நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்த திட்டத்தின் நிலை பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டுமென்பதால் அது குறித்த  துண்டறிக்கை  கொடுத்தேன். அதற்காக என்னை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அங்குதான் என்னை நிர்வாணப்படுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனை என்பது எனக்கு மட்டுமல்ல. சிறைக்குள் வருகின்ற அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் நடக்கிறது.

சிறையில் இது எழுதப்படாத ஒரு விதியாக இருக்கிறது. இது குறித்து யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவ்வாறு கேள்வி எழுப்பினால் அது வெளியிலும் வருவதுமில்லை.அதற்காக காவல்துறையினரிடம் நான் சண்டை போட்டேன். இப்படியான சோதனை என்பது மனித உரிமை மீறல் என்று குரல் கொடுத்தேன்.அதன் பிறகு தான் இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்தது.அந்த விஷயத்தில் போலீசார் என்னை அச்சுறுத்தினார்கள் ஆனாலும் அதைக் கண்டு பயப்படாமல் எதிர்த்து நின்றேன். ஆனாலும் இன்னும் சிறைகள் மாறவில்லை. ஆட்சியாளர்கள் மாறினாலும் அப்படியான அவலங்கள் இன்றும்  தொடர்கிறது என்பதே உண்மை “

“தொடர்ச்சியான கைதுகள்  மூலம் கற்றுக் கொண்ட பாடம் என்ன ? “

  “மக்களுக்கான போராட்டம் என்று களம் இறங்கிய போது கைது நடவடிக்கை, சிறை செல்வது போன்ற விஷயங்கள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இவை எல்லாம் அறியாமல் நான் போராட்டக் களத்திற்குச் செல்லவில்லை. அதுவும் எங்களுடைய இயக்கத்தில் உள்ள தோழர்களுடன் பழகியதால் மக்களுக்கான களப்போராட்டம் எப்படி இருக்கும் என்பதை அவர்களிடம் இருந்து அறிந்திருந்தேன். அந்த வகையில்தான் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகப் போராடியபோது  முதல் முறையாகக் கைது செய்யப்பட்டேன்.அதன் பிறகு ைஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்றபோது, ரயிலில் கைது செய்யப்பட்டேன். அதன் பிறகு ,சேலத்தில் ைஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கினேன்.அப்போதுதான் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டேன்.ஆனால் இதைக்கண்டு நான் பயப்படுவதுமில்லை, கவலைப்படுவதுமில்லை”என்றார் .

“மத்திய மாநில அரசின் திட்டங்களை எதிர்ப்பது ஏன் ? “

“மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. அவர்கள் கொண்டு வருகிற திட்டங்கள் மக்களுக்கும் மற்றும் இயற்கைச் சூழலுக்கும் எதிராக உள்ளது.குறிப்பாக, வாழ்வாதாரத்தை அழித்துவிட்டுப் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகளை உயர்த்துவதற்கான திட்டமாக இருக்கிறது என்று கருதுவதால் எதிர்க் கிறேன். அதனால் எந்த திட்டங்களையும்  நான் கண் மூடித்தனமாக எதிர்க்கவில்லை. ஆதாரங்கள் மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பே அந்த திட்டங்களை எதிர்க்கிறேன்.”

 “எட்டு வழிச்சாலை திட்ட போராட்டத்திற்குப் பிறகு வளர்மதியைக் காணவில்லையே ஏன் ? “

“கொரோனா காரணமாகப் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. லாக்டௌன் முடிந்து உத்தரவுகள்  தளர்த்தப்பட்ட பின்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டுதான் இருக்கிறேன். தினம் தினம் மக்களுக்கான  எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கூட உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத் தில் பங்கேற்று இருக்கிறேன். ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. ஆனால் நான் களத்தில் தான் இருக்கிறேன். களத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும்.”

“நீங்களும் உங்களுடைய இயக்கமும் தேர்தலை ஏன் புறக்கணிக்கிறீர்கள் ?”

“எங்களுடைய கொள்கையே தேர்தல் புறக்கணிப்பு என்பதாக வைத்துள்ளோம். தேர்தல் மூலமாக எதையும் சாதிக்க முடியாது என்பது தெரியும் . இங்கு பெறப்பட்ட உரிமைகள் அனைத்துமே போராட்டங்கள் மூலமாகத்தான் சாத்தியப்பட்டுள்ளது . ஓட்டு அரசியலால் மக்களுக்கு நன்மை விளையாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். எந்த அரசியல் கட்சியிலும் மக்களுக்கான தேவைகளை இதுவரை பெற்றுத் தரவில்லை.குறிப்பாக  சமூகத்தின் முக்கிய பிரச்னைகளாக இருக்கக்கூடிய பெண் விடுதலை, சாதிய வர்க்க போராட்டம் உள்ளிட்டவற்றில் இந்த  மத்திய – மாநில அரசுகள் எதையும் செய்யவில்லை .அதனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் எதையும் செய்யமாட்டார்கள் என்பது தெரிந்த காரணத்தால் வாக்கு அரசியலைப் புறக்கணிக் கிறோம்”

 யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த  மாற்றமும் நடைபெறாது. குறிப்பாக அ.தி.மு.க. -தி.மு.க. என எந்த மாறுபாடும் இல்லை. இருகட்சிகளைச் சேர்ந்தவர்களுமே ஒன்றைச் செயல்படுத்துவதில் மாற்றங்களை செய்வார்களே தவிர, இருவருமே கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார்கள். தி.மு.க. தான் வருகின்றது. ைஹட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தது. எதிர்க்கட்சியாக மாறியபோது மன்னிப்பைக் கேட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றது திமுக . தற்போது ‘வேறு வழியில்லை. தற்போதைக்கு எழுதுங்கள். விலக்கு கோருவதற்கு முயற்சிக்கிறோம்’ என்கிறது. சென்னை டி.எம்.எஸ்.சில் நடந்த செவிலியர்கள் போராட்டத்தில் தி.மு.க. அரசாங்கம் மோசமான வன்முறையைக்  கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அதேபோன்று சேலம் மோரூரில் நடந்த சாதியக் கலவரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தது.அதனால் தி.மு.க. ஆட்சியிலும் அராஜகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, தி.மு.க. மீது உள்ள குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பெரிது படுத்தாமல் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.”

 உங்களை சில இயக்கங்கள் இயக்குவதாகக் கூறுப்படுவது குறித்து?    

“என்மீது மட்டும் இந்தக் குற்றச்சாட்டை வைக்கவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுகிற அத்தனைப் பேருக்குப் பின்னாலும் இயக்கங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக, பா.ஜ.க அரசை விமர்சிக்கிற அத்தனை பேரையும்  நேரடியாகவே இவர்கள் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தேச விரோத சக்திகள் என்று கூறுகிறார்கள். அதனால் என் மீது மட்டும் இப்படியான குற்றச்சாட்டை வைக்க வில்லை. அதனால் எனக்கு பின்னால் எந்த இயக்குமும் இல்லை, இயக்கத்தில் தான் நான் இருக்கிறேன். இயக்கம் இல்லை என்றால் நான் இல்லை. “

 “இன்றைய  பெண்கள் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

 “பெண்கள் முன்னேறியிருக்கிறார் கள் என்று  எந்த இடத்திலும் சொல்ல முடியாது. சிறிய குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை  பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இப்படியான சம்பவங்கள் மிக எளிமையாக சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.டெல்லியில் ரபியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரத்தை நினைத்தால் பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்று சொல்ல முடியுமா ?அதுவும் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்தவர்.

அந்தக் கொலை வழக்கில் குற்றவாளியை இன்று வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. ஏன் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லை.இப்படியான நிலையில் எவ்வாறு பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியும்?  கல்வி, வேலை வாய்ப்பை மட்டுமே வைத்து பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்று கூறமுடியாது. அதற்குக் காரணம் பெண்கள் உழைப்பவர்களாக இருக்கிறார்களே தவிர, ஊதியம் பெறுபவர்களாக அல்ல. இன்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள்  குடும்பத்தாரின் அனுமதியை எல்லாவற்றிற்கும் பெற்றாக வேண்டிய கட்டாயம் உள்ளது . அதனால் பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது.”

“மக்களுக்காகப் போராடுகிறீர்கள், மக்கள் உங்களை ஏற்றுக் கொண்டார்களா?”

“இயக்கத்திற்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் ஆதரவு இல்லாமல் இயக்கங்களில் இருக்க முடியாது. அதனால் மக்களைச் சார்ந்துதான் இருக்கிறேன். நாங்கள் மக்களை விரும்புவது போல், மக்களும் எங்களை விரும்பி ஆதரிக்கிறார்கள் . அதனால் எளிய மக்களின் அன்புதான் என்னை இயங்க வைக்கிறது.

“தொடர் போராட்டங்கள்  மற்றும் கைது நடவடிக்கைகள் உங்களைச் சோர்வடையச் செய்கிறதா?”

 “மக்களுக்கான போராட்டத்தில் என்றுமே சோர்வு வராது.களத்தில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். ஊடகங்கள் எங்களைக் காட்டுவதில்லையே தவிர மற்றபடி நாங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்”என்றார் தீர்க்கமாக…

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!