day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

குள்ளமாக இருப்பதும் கியூட்தான்! – சங்கீதா

குள்ளமாக இருப்பதும் கியூட்தான்! – சங்கீதா


பனியில் விளையாடும் பாண்டா கரடியைப் பார்த்திருப்போம். பிரமாண்டமான பெரிய பாண்டவைவிட சின்ன பாண்டாக்கள்தான் அழகு! பூனைகளில் சின்ன குட்டிகளே அழகு. சிறியதாக இருப்பது என்பது என்றுமே சிறந்ததற்கு நிகரானதுதான்உயரத்தைப் பற்றி சிலவற்றை நம் தெரிந்துகொள்வோம்.

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் வளர்ச்சி அந்தக் குழந்தையின் மரபணுக்களில் உள்ளபடிதான் அமையும். உயரம்,உடல் எடை, கருவிழி நிறம் போன்ற அனைத்தும் நம் மரபணுக்களில் பதியப்பட்டிருக்கும்  ஜீன்களுக்கு ஏற்றவாறுதான் அமையும்எனவே, நமது உடலமைப்பு நம் முன்னோர்களின் மூலம் நமக்கு ஏற்படலாம்அவற்றுள் மிக முக்கியமானயது உயரம்.

பெண்களுக்கு நளினத்தைக் கொடுப்பது அவர்களது உயரம். ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதனுடைய உயரம் சராசரியாக 40-47 செ.மீ. அளவுக்கு இருக்கும். வயது செல்லச் செல்ல உயரம் அதிகரித்து ஒரு வருடத்திற்கு 6 முதல் 8 செ.மீ., வரை வளர்ந்துகொண்டே போகும் . பருவம் அடையும் வரை ஒரு பெண் வளர்ந்துகொண்டே வருகிறாள். உடல் வளர்ச்சி 13-15 வயது வரை நடக்கிறது. சில நேரங்களில் 17 வயதுவரைகூட வளரலாம். இந்த வளர்ச்சி பல காரணிகளைச் சார்ந்து அமைகிறது.

பெண்களின் உயரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் மரபணுக்கு அடுத்தபடி யாக ஊட்டச்சத்து, உடல்ரீதியான  காரணிகள் மற்றும் வளர்ச்சிக்கான ஹார்மோன்  குறைபாடு போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முதல் காரணியான மரபணுவைப் பற்றி சற்று தெரிந்து கொள்ளலாம். ஒரு பெண்ணின் உயரம் 80% அவரின் மரபணுவில் உள்ள டி.என்.. படிவரிசையைப் பொறுத்தே அமையும். அதுவும் பெண்களின் வளர்ச்சி அவர்களின் தந்தையின் வம்சாவழியின் முறைப்படி அமையும்.

அடுத்தது பெண்ணின் உணவு முறை. பொதுவாகவே புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது நல்ல உடல் வளர்ச்சிக்கு உதவும் . அதிலும் பால் , கொட்டைகள் , கீரை வகைகள் , மீன்களில்  நெத்திலி போன்றவற்றில் உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது . வெள்ளை அரிசியால் ஆன உணவுப் பொருட்களை உட்கொள்வதை விட பார்லி மற்றும் கைக்குத்தல் அரிசியைச் சாப்பிடுவது வளர்ச்சிக்கு உதவும் .

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய   உணவுப் பொருட்களை உண்ணுவது நல்லது. எந்த உணவாக இருந்தாலும் நன்றாக மென்று உண்ண வேண்டும் .

துரித உணவகங்களில்   விற்கப்படும் உடனடி  உணவுகள் மிகவும் கெடுதல் விளைவிக்கும்இந்த உணவுகளில் சுவைக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் உடலின் உயர வளர்ச்சியைத் தடுக்கும் .

பெண்களில் உயரத்தை ஊக்குவிக்கும் அடுத்த காரணி  உடலியக்கச் செயல்பாடு. இந்த வார்த்தையை நம்மில் பலர் தவறாகப் புரிந்துவைத்துள்ளோம். தினமும் பள்ளி அல்லது அலுவலகம் செல்வது, பின் வீடு திரும்பி அப்படியும் இப்படியும் உடலை அசைத்து சிறுசிறு வேலைகளைச் செய்வது உடலியல் செயல்பாடு ஆகாது .அவை நாம் செய்யும் தினசரி செயல்கள்.

முன்பெல்லாம் பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகளில் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்யச் சொல்வார்கள். இவை அனைத்தும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். இவை எலும்புகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுவாக்கி உயரமான வளர்ச்சிக்கு உதவும். ஆனால், இந்தக் காலகட்டத்தில் பெண்பிள்ளைகள் ஓடி, ஆடி, அவ்வளவு ஏன் சிறு தொலைவுக்கு  நடப்பதையே தவிர்த்துவிடுகின்றனர்

பள்ளிகளுக்கு மிதிவண்டியில் செல்வது, பயிற்சி வகுப்புகளுக்கு  நடந்தே செல்வது, கடைகளுக்குச் சென்று காய்கறிகளை வாங்கி வருவது  போன்றவை பெண் குழந்தைகள் தினமும் செய்ய வேண்டிய இன்றியமையாத செயல்கள்.

பெண்கள் சில விஷயங்களில் அப்டேட்டாக இருப்பதாக நினைத்து நல்ல பழக்க வழக்கங்களை அவுட் டேட்டடாகிவிடுகிறார்கள் .

அடுத்து, நல்ல உயரமாக வளர்வதற்கு உதவுவது நல்ல துக்கம். 8-10 மணி நேர ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம் .இரவு 10 மணிக்கு மேல் உறங்காமல் இருப்பதும் காலை 6 மணிக்கு மேல் உறங்குவதும் கெடுதல் தரும் . இந்த இடைப்பட்ட நேரத்தில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஹார்மோன் சுரக்கப்படும். எலும்புகளும் தசைகளும் நல்ல வளர்ச்சி அடையும்

மரபணுவைப் பொறுத்துத்தான் உயரம் அமையும் என்றாலும் உயரக் குறைவை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை. ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, உடலியக்கச் செயல்பாடுகள் மூலம்  ஓரளவுக்குச் சரிசெய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக குள்ளமாக இருந்தாலும் கியூட்டாக இருக்கலாம்

நாம் முயன்றால் சில செ. மீ., வளரலாம். முடியாது என்பது முடிவல்ல. இங்கே தந்திருக்கும்  சில எளிய பயிற்சிகள் நம் உயர வளர்ச்சிக்கு உதவும். இந்தப் பயிற்சிகளுக்குஸ்ட்ரெச்சஸ்என்று பெயர். நம் தொடையிலும் கால் பகுதியிலும் உள்ள எலும்பைச் சுற்றி நிறைய சதைப் பகுதி உள்ளது. இந்தப் பயிற்சிகளைச் செய்வதால் வளரும் நிலையில் உள்ள எலும்புகளில் உள்ள கார்டிலேஜ் என்னும் பகுதி ஒரு வகையான தூண்டுதலுக்கு ஆட்பட்டு, ஆஸ்டியோபிளாஸ்ட்ஸ் என்னும் செல்கள் வளர்ச்சியடைகின்றன. இதன்மூலம் நம்மால் ஓரளவுக்கு உயரமாக வளர முடியும்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!