அயர்லாந்து நாட்டின் டப்லின் நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் 50க்கும் மேற்பட்ட ‘ஏஏ மற்றும் ஏஏஏ’ ரக பேட்டரிகள் இருப்பது எக்ஸ்-ரேயில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவர்களின் ஒரு வார கால காத்திருப்புக்குப்பின் இயற்கையாக மலம் வழியாக ஐந்து ஏஏ பேட்டரிகளை இயற்கையாக வெளியேற்றினார். அதன்பின், அந்த பெண்ணுக்கு வயிற்று வலி அதிகரிக்கவும் அறுவை சிகிச்சையின் மூலம் மீதமுள்ள பேட்டரிகளை மருத்துவர்கள் அகற்றினர். இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அந்த பெண்ணைப்பற்றி அந்த நாட்டின் மருத்துவ நாளிதழான ‘தி ஹப் போஸ்டில்’ வெளியிடப்பட்டுள்ளது.