இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஐந்து டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று டி20 போட்டிகள் முடிந்த நிலையில், நான்காவது, டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே விளையாடிய மூன்றாவது போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தென்னாப்பிரிக்க அணி முதல், இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. இந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி இந்த ஆட்டத்தில் வீழ்த்துவதன் மூலம் தொடரை சமன் செய்ய இயலும். எனவே கடந்த ஆட்டத்தை போலவே, இந்த ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி தொடரை கைப்பற்ற ஏதுவாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.