குடியரசுத் தலைவர் மாளிகையில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித்துக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுள்ளார். இவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 74 நாட்கள் மட்டுமே பதவி வகித்து, வருகிற நவம்பர் 8ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.