திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலைமீது செட்டிகுளம் உள்ளது. இந்த குளம் நகராட்சி நிர்வாகத்தால் சரிவர பராமரிக்கப்படாமல் சுற்றுசுவர் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், இந்த குளத்தில் இன்று பிணம் மிதப்பதாக பொதுமக்கள் திருத்தணி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி காவல்துறையினர் குளத்தில் இருந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.