இந்தியாவின் 76ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டரான 15 வயதே கொண்ட பிரணவ் ஆனந்த் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். இவர், வேர்ல்ட் யூத்-2022 போட்டியில் 11 ஆட்டங்களில் 9 புள்ளிகளை எடுத்து உலக யு-16 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது இளம்பரிதி 11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை எடுத்து யு-14 உலக சாம்பியனாகியுள்ளார். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம்பரிதிக்குப் பிரபல செஸ் வீரர் அனிஷ் கிரி, ரூ.2 லட்சம் வழங்கி ஊக்குவித்துள்ளார்.