தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேடு காய்கறி வணிக சந்தையில் நேற்று ரூ.20-க்கு விற்பனையான தக்காளி இன்று காலை முதல் கிலோ ரூ.35 முதல் ரூ.40ஆக விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. கன மழை, தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களால் வழக்கமாக 90 லாரிகளில் கோயம்பேடுக்கு வரும் தக்காளி தற்போது 40-லிருந்து 45 லாரிகளில் மட்டுமே வருவதாலே தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.