11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 27) வெளியாது. இந்த தேர்வில் மொத்தம் 7.59 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், தேர்வெழுதிய மாணவர்களில், 3,48,243 பேர் தேர்ச்சி அடைந்தனர் (84.86% தேர்ச்சி). அதேபோல், தேர்வெழுதிய மாணவிகளில், 4,11,612 பேர் தேர்ச்சி பெற்றனர் (94.99%). மாணவர்களை காட்டிலும் எப்போதும்போல 10.13% கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.