இசையமைப்பாளர் இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, இளையராஜாவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டவர்களும் திரைத்துறை மற்றும் அரசியல் சார்ந்த அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்பியாகியுள்ள இளையராஜாவுக்கு அவரது, ரசிகர்களும் பொதுமக்களும் தங்களின் அன்பை வெளிப்படுத்தி இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ”என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி… from Seattle, USA” என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.