சென்னை, ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 9 வயது சிறுமிக்கு, பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடந்து முடிந்த நிலையில், தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தொடங்கியது. இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து 8 மணி நேரம் நடக்கும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளனர். சிறுமிக்கான மருத்துவ சிகிச்சையை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முன்னதாக, அறிய வகை நோயால் பாதிப்பட்ட தங்களின் மகளுக்கு உதவ சிறுமியின் பெற்றோர் அரசிடம் வேண்டுகோள் வைத்த நிலையில், இன்று காலை முதல் அறுவை சிகிச்சை நடந்து வருகிறது.