நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் மகனும் கேரளா வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நேற்றுமுன்தினம் அதாவது ஜூன் 1ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதில், ராகுல் காந்தி வரும் 2ஆம் தேதியும் (நேற்று), சோனியா காந்தி வரும் 8ஆம் தேதியும் ஆஜராக குறிப்பிட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் கேட்டு மின்னஞ்சல் மூலம் அமலாக்கத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று வரும் 13ஆம் தேதி (திங்கட்கிழமை) அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை புதிய சம்மனை விடுத்துள்ளது.