இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.470ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.460ஆகவும் உயர்ந்ததால் ‘டோக்கன்’ முறையை அந்த நாட்டு அரசு அமல்படுத்தியது. இந்தநிலையில் அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியாக இன்று நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைத்து பணிகளுக்கும் எரிபொருள் விற்பனை செய்யத் தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னதாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று (ஜூன் 27) முதல் ஜூலை 1ஆம் தேதி வரை கொழும்பு மற்றும் இதர நகர பகுதிகளில் செயல்படும் பள்ளிகள் மூடப்படுவதாக அந்த நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் நடக்கவிருந்த தேர்வுகள், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.