பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரன் தம்பதி சமீபத்தில் தங்களது இரட்டை குழந்தைகளை வரவேற்றுள்ளனர். இந்த செய்தியை இன்று தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பாடகி சின்மயி இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில், “எங்கள் இரட்டையர்கள் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த குழந்தைகளுக்கு திரிப்தா, ஷர்வாஸ் என பெயரிட்டுள்ளனர். மணிரத்தனம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட பின்னணி பாடகியாக அறிமுகமான சின்மயி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். மேலும், இவர் மாஸ்கோவில் காவிரி, வணக்கம் சென்னை திரைப்படங்களில் நடித்தவரும், தெலுங்கில் நாகார்ஜூனாவை வைத்து ‘மன்மதடு 2’ என்ற திரைப்படத்தை இயக்கியவருமான ராகுலை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.